“நான் CM ஆகணும்” – மீரா மிதுன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வர வேண்டிய என்னை சில முன்னணி நடிகர்கள் தன்னுடைய வளர்ச்சியைக் கெடுத்து வருகின்றனர் என்று கூறிவந்த மீரா மிதுன், தற்போது ஒரு படி முன் சென்று சிஎம் ஆக வேண்டும் என கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த உலகத்தில் எதையெல்லாம் செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறிவுறுத்துவார்களோ அதையெல்லாம் செய்யும் பெண்மணி தான் மீரா மிதுன்.

சமீபத்தில் கூட ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தவறாக பேசி ஜெயிலுக்கும் சென்று வந்தார். அதன் பிறகு வெளியில் தலைகாட்டாமல் இருந்தார். ஆனால் சில யூடியூப் சேனல்கள் அவரை பேட்டி எடுத்து மீண்டும் உலவ விட்டுள்ளனர்.

Advertisement

இதுவரை நடிகர்களையும், அவரது குடும்பத்தாரையும் விமர்சனம் செய்து வந்த மீராமிதுன் சமீபகாலமாக அவருக்கு தேர்தலில் போட்டியிட்டு, சிஎம் ஆக வேண்டும் என்றும் ஆசை இருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்.