1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடிகராக மட்டும் இல்லாமல் பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்துள்ளார்.

cinema news in tamil

இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும், 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் தான் ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் எனிமி படக்குழுவினர் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.