விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக செல்வராகவனும் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

tamil cinema news

தற்போது விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி பைடி பல்லி இப்படத்தை இயக்க உள்ளார்.

Advertisement

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக விஜய்யின் 66-வது படத்தை தயாரிக்கிறார். மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.