எஸ்.ஜே சூர்யாவை பற்றி விஜய் என்ன பேசியுள்ளார் பாருங்க…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் அஜித்தை வைத்து ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. விஜய்யை வைத்து குஷி படமும் அஜீத்தை வைத்து வாலி படமும் இயக்கினார்.

cinema news in tamil

சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார் எஸ் ஜே சூர்யா. அதன்பிறகு நண்பன், ஸ்பைடர், மெர்சல், மாநாடு போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில் நடிகர் விஜய் எஸ் ஜே சூர்யாவை பற்றி பேசிய செய்தி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவர் கூறியதாவது: சினிமாவில் வெற்றி தோல்வி வருவது சகஜம். என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது ‘குஷி’ தான். எஸ் ஜே சூர்யா குஷி’ படம் மூலம் என்னை உயர்த்தியவர். எஸ்.ஜே சூர்யா கதை சொல்வதில் கிங் என பெருமையாக பேசி உள்ளார்.

Advertisement

எஸ்.ஜே சூர்யா நடித்த ‘இசை’ பட ஆடியோ வெளியீட்டில் அவர் பேசியுள்ள வீடியோ தற்போது பகிரப்பட்டு வருகிறது.