அந்த நடிகையா..! வேண்டாம். பிரபல நடிகையுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ஒருவருடன் நடிக்க விஜய்சேதுபதி மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி தற்போது 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் சில படங்கள் தொடர்ச்சியாக ரிலீசாக உள்ளது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை விஜய்சேதுபதியின் படத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்தனர்.

Advertisement

அந்த படத்திற்கு கீர்த்தி ஷெட்டி வேண்டாம் என்றும் வேறு ஒரு நடிகையை பரிசீலனை செய்ய வேண்டும் என விஜய் சேதுபதி படக்குழுவினரிடம் கூறியுள்ளாராம்.

cinema news in tamil

தெலுங்கு திரைப்படமான ’உப்பன்னா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். தன்னுடன் மகளாக நடித்த ஒரு நடிகையுடன் ஜோடியாக நடிக்க முடியாது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் உள்பட ஒரு சில நடிகர்கள் தன்னுடன் மகளாக நடித்த நடிகைகளுடன் பின்னாளில் ஜோடியாக நடித்த வரலாறு தமிழ் சினிமா வரலாற்றில் உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் இந்த செயல் பாராட்டத்தக்கது.