மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தில் விஜய் சேதுபதி

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ படத்தில் கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சைக்கோ படத்திற்கு பிறகு விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் வேளைகளில் மிஷ்கின் இறங்கினார். ஆனால் விஷாலுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக அந்த படத்திலிருந்து விலகினார்.

Advertisement

தற்போது ‘பிசாசு 2’ படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இந்தப்படத்தில் தானும் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த ‘பிசாசு’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகிவரும் ‘பிசாசு 2’ படத்தில் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த போஸ்டர் இணையத்தில் படு வேகமாக வைரலாகியது. இந்த ஆண்டு இறுதிக்குள் பிசாசு 2 படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.