விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது: எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தற்போது கலைக்கப்பட்டதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடிகர் விஜய் தனது பெயரை பயன்படுத்தி பொதுக்கூட்டங்களை நடத்த கூடாது என தாய் சோபா, தந்தை சந்திரசேகர் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினருக்குத் தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.