“இது பதவி அல்ல பொறுப்பு” வெற்றியாளர்களுக்கு விஜய் அறிவுரை.

ஊரக உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினரை கடந்த 25-ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய் சந்தித்தார்.

வெற்றி பெற்றவர்களுக்கு விஜய் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

Advertisement

“ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை அன்று விஜய் நேரில் சந்தித்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இது “பதவி” அல்ல “பொறுப்பு” என்பதை உணர்ந்து பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்குமாறு அன்போடு கேட்டுக்கொண்டார்” இவ்வாறு புஸ்ஸி என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தற்போது விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கிவருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.