வீரமே வாகை சூடும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

து.ப சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 31 வது படம் ‘வீரமே வாகை சூடும்’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி சென்னையில் சமீபத்தில் நிறைவடைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Advertisement

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.