5 கோடி ரூபாய் கொடுங்க: சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்..!

சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படத்திற்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குற்றவாளி கதாபாத்திரத்திற்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்கள் அடையாளம் போன்றவைகளால் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அந்தக் காட்சி நீக்கப்பட்ட பிறகும் பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்.

Advertisement

ஏழு நாட்களுக்குள் ஐந்து கோடி ரூபாய் அபராதமாக வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.