வலிமை படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பிறகு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார்.

இந்தப் படத்தின் ‘ நாங்க வேற மாறி’ பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு இரண்டாவது பாடலின் டீசர் வெளியாகியது. அதில் டிசம்பர் 5ம் தேதி முழு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வலிமை படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

Advertisement