வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

படத்தின் பாடல்கள், டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. நேற்று வெளிவந்த படத்தின் ட்ரைலர் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

பிறகு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்தார். ஆனால் தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் வருகிற ஜனவரி மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

Advertisement

இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

valimai movie release date tamil