தியேட்டருக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம் – மாநாடு தயாரிப்பாளர் எதிர்ப்பு

கொரோனா தாக்கத்தை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பலரும் இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். ஆனால் இன்னும் சிலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல அரசு தடை விதித்திருந்தது.

Advertisement

இந்நிலையில் தற்போது திரையரங்குகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவிற்கு மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

cinema news in tamil

மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!” என அவர் தெரிவித்துள்ளார்.

மாநாடு திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.