தீபாவளி அன்று திரைக்கு வருகிறது அருண் விஜய் படம்..!

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வா டீல்’ படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் வெளியாகியது.

இப்படத்தில் அருண் விஜய் மற்றும் கார்த்திகா நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் வம்சி கிருஷ்ணா, கல்யாண், சுஜா வருணி, சதீஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Advertisement

ரத்தின சிவா இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பரில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. தீபாவளியன்று ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ படமும் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படமும் வெளியாக உள்ளது.