உடன் பிறப்பே திரை விமர்சனம்

சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, ஷிஜா ரோஸ், ஆடுகளம் நரேன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இரா.சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். டி. இமான் இசையமைத்துள்ளார்.

udanpirappe movie thirai vimarsanam

புதுக்கோட்டை அருகே இருக்கும் சின்ன கிராமத்தில் சசிகுமாரின் குடும்பம் வாழ்ந்து வருகிறது. சசிகுமாரின் தங்கை ஜோதிகா மற்றும் அவருடைய கணவர் சமுத்திரக்கனியும் அதே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். சசிகுமார் அடிதடி போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார். இது சமுத்திரக்கனிக்கு பிடிக்கவில்லை. இதனால் சமுத்திரக்கனி தனது மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிரிந்து போன குடும்பத்தை ஒன்று சேர்க்க ஜோதிகா போராடுகிறார். அவருடைய போராட்டம் ஜெயித்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

Advertisement

சசிகுமார் கிராமத்து நாயகனாக அசத்தியுள்ளார். சட்டத்தை மதிக்கும் நேர்மையான பள்ளி ஆசிரியராக சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார். ஜோதிகாவின் நடிப்பு அருமை. படத்தில் சூரியின் காமெடி பெரிதாக தெரியவில்லை.

வேல்ராஜின் ஒளிப்பதிவும் ரூபனின் படத்தொகுப்பும் அருமை. டி இமானின் பின்னணி இசை ஏற்கனவே பல முறை கேட்ட இசைபோல இருக்கிறது. கிராமத்து பின்னணி கதை என்பதால் கிராமத்து அழகை காட்டி கண்களுக்கு விருந்து படைத்துள்ளனர்.

அண்ணன் தங்கை சென்டிமென்டில் ஏற்கனவே பல படங்கள் வெளியானதால் இப்படத்தில் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. இவை எல்லாம் ஒரு புறமிருந்தாலும் நல்ல பொழுதுபோக்கு சினிமாவாக ‘உடன்பிறப்பே’ அமைந்திருக்கிறது. குடும்பத்துடன் பார்க்கலாம்.