விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ படத்திற்கு U சான்றிதழ்

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘மாமனிதன்’. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இசை அமைத்துள்ளனர். விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. பிறகு டிசம்பர் 6ம் தேதி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது.

Advertisement

2010ம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘தென்மேற்கு பருவக் காற்று’ படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் இதற்கு கிடைத்தது. இந்தப் படத்தின் மூலம்தான் விஜய்சேதுபதி நாயகனாக அறிமுகமானார். எனவே இந்த படமும் ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.