‘மாநாடு’ திரைப்படம் வெளியானது – சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படம் தீபாவளியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. பிறகு நவம்பர் 25 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

நேற்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படம் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

இந்நிலையில் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து விடிய விடிய நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து படம் ரிலீஸாவது உறுதி என்றும் கூறப்பட்டது.

காலை 6.45 மணிக்கு முதல் காட்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திரையரங்குகளில் ரசிகர்களின் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு இடையில் ‘மாநாடு’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

Image