சமீபத்தில் வந்த படங்களில் இதுதான் பெஸ்ட் மூவி

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் புதுப்புது படங்கள் வெளியாகும். அப்படி வெளியாகும் படங்களில் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ஆனால் இந்த தீபாவளிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தீபாவளிக்கு வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.

அண்ணாத்த

Advertisement

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் தீபாவளியன்று வெளியானது. மேலும் இடப்பதில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிச்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு படம் இல்லாமல் போனது ஏமாற்றம்.

எனிமி

விஷால் ஆர்யா நடிப்பில் எனிமி படம் தீபாவளியன்று வெளியானது. ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கி இருந்தார். பெரிய அளவில் வரவேற்பு இல்லையென்றாலும் ஓரளவு இப்படத்திற்கு வரவேற்பு இருந்து வருகிறது.

எம்.ஜி.ஆர் மகன்

OTTயில் வெளியான இந்த படம் தான் மிக மோசம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். அந்த படங்களில் கதை இல்லையென்றாலும் காமெடி இருந்தது. இதில் கதையும் இல்லை, காமெடியும் இல்லை. ஒரே ஆறுதல் என்னவென்றால் இந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை.

ஜெய் பீம்

சமீபத்தில் OTTயில் வெளியான ஜெய் பீம் படம்தான் சூப்பர் ஹிட் படமாக மாறியுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். சத்தமில்லாமல் வெளிவந்த இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.