எளியவனைக் கண்டால் எட்டி உதைக்கும் – ஜெய் பீம் படத்தை பற்றி திருமாவளவன் கருத்து

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

1995 இல் நடந்த லாக்கப் மரணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இருளர் பழங்குடியினர் இந்த சமூகத்தாலும், காவல்துறையாலும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை ‘ஜெய் பீம்’ படம் பேசுகிறது.

Advertisement

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாராட்டு தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் படத்தைப் பார்த்து, தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

tamil cinema news

“சட்டம் – அது வலியவனைக் கண்டால் வளைந்து கொடுக்கும். எளியவனைக் கண்டால் எட்டி உதைக்கும் இது சிறுத்தைகளின் அரசியல் முழக்கம். காலம் காலமாய் வஞ்சிக்கப்படும் வதைக்கப்படும் பழங்குடி மக்களின் பாழும் வாழ்வைப் பாடமாய் விவரிக்கும் படமே ’ஜெய் பீம்’. இது அரச பயங்கரவாதத்தின் பேரவலம்” என அவரது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

‘ஜெய் பீம்’ படத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பலர் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.