‘தண்ணி வண்டி’ திரை விமர்சனம்

அறிமுக இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கத்தில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தண்ணி வண்டி. இவருக்கு ஜோடியாக வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.

thanne vandi movie story in tamil

தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், ‘காதல்’ சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நாயகன் உமாபதி மதுரையில் தண்ணீர் வண்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். அதே ஊரில் பவர் லாண்டரி கடை நடத்தி வரும் நாயகியை காதலிக்கிறார். அந்த ஊரில் புதிதாக பெண் ஆர்.டி.ஓ அதிகாரியாக வினுதா லால் வருகிறார். தப்பு செய்பவர்களை உடனே தண்டனை கொடுக்கும் தைரியமான அதிகாரியாக இருக்கிறார். ஆனால் பெண் அதிகாரியின் மறுபக்கம் காம லீலைகள் கொண்டதாக இருக்கிறது. இதனால் அவமானப்படும் வினுதா லால் அதற்கு காரணமான நாயகியை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

Advertisement

மகாலிங்கம் கதாபாத்திரத்தில் உமாபதி ராமையா நடித்திருக்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகிக்கு அதிக வேலை இல்லையென்றாலும் கொடுத்த வேலையை எதார்த்தமாக செய்திருக்கிறார்.

பெண் அதிகாரியாக வரும் வினுதா லால் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மோசஸின் பின்னணி இசை சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘தண்ணி வண்டி’ வழக்கமான சண்டைக்காட்சிகள், காதல் என 2006, 2007ம் ஆண்டில் சினிமா பார்ப்பது போல உணர்வு ஏற்படுகிறது.