‘தள்ளிப் போகாதே’ திரை விமர்சனம்

அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன், ஆடுகளம் நரேன், காளி வெங்கட் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். ஆர் கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த நின்னுக்கோரி என்ற படத்தை ரீமேக் செய்து எடுக்கப்பட்ட படம் தான் ‘தள்ளி போகாதே’. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளி வைக்கப்பட்டு ஒருவழியாக இன்று வெளியாகியுள்ளது.

அதர்வா அனுபமா இருவரும் காதலித்து வருகின்றனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அனுபமா அதர்வாவிடம் கேட்கிறார். அதற்கு அவர் தன்னுடைய படிப்பு தான் முக்கியம் என டெல்லிக்கு சென்று விடுகிறார். இதனிடையே அனுபமா தனது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறார்.

Advertisement

சிறிய இடைவெளிக்குப் பிறகு அதர்வாவும் அனுபமாவும் சந்தித்து கொள்கிறார்கள். அப்போது “நீ இன்னும் என்னை மறக்கவில்லை” என அனுபமாவிடம் அதர்வா கூறுகிறார். பிறகு இருவருக்கும் விவாதம் ஏற்படுகிறது. இந்த விவாதத்தின் முடிவில் அனுபமா வீட்டுக்கு 10 நாட்கள் தங்க முடிவு செய்கிறார் அதர்வா. அதற்கு அனுபமாவின் கணவரும் சம்மதிக்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

Thalli Pogathey movie story in tamil

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அனுபமா நடிப்பில் ரசிக்க வைக்கிறார். ஆனால் படத்தின் கதை ஒரு விறுவிறுப்பு இல்லாமல் செல்கிறது.

ஆடுகளம் நரேன், காளி வெங்கட் ஆகியோர் ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். படத்தில் சில காட்சிகள் ரசிக்கும் படியாக இல்லை. பாடல்கள் ஓரளவு ரசிக்க முடிகிறது.

விறுவிறுப்பான படங்களை பார்த்தவர்களுக்கு ‘தள்ளி போகாதே’ படம் கொஞ்சம் சிரமம்தான்.