“நான் நடிக்காமல் கூட இருப்பேன், ஆனால் இதை பண்ண மாட்டேன்” – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தனது திறமையான நடிப்பால் உயர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

பாகுபலி வில்லன் நடிகர் ராணாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு சென்றுள்ளது. ஆனால் அவர் படத்தின் கதை பிடிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி நடிக்க மறுத்துள்ளார். மேலும் நடிக்காமல் கூட இருப்பேன் ஆனால் இந்த மாதிரி மொக்கை கதைகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

பல தொடர் வெற்றிப் படங்கள் மற்றும் விருதுகளால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சற்று ஆணவம் அதிகமாக உள்ளது என பலரும் வெளிப்படையாக கிசுகிசுக்கின்றனர்.