அடுத்த வருடம் பார்க்கலாம் – பிரபல இயக்குனரை கழட்டிவிட்ட சூர்யா

நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்தப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” என்ற படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயக்குனர் சிறுத்தை சிவா படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக செய்தி ஓன்று வெளியானது.

மேலும், இந்த படத்தில் சூர்யா இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் அதன் பிறகே வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் எனவும் கூறப்பட்டது.

Advertisement

ஆனால் சூர்யா, கைவசம் நிறைய படங்கள் உள்ளதால் கால்ஷீட் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே சில மாதங்கள் கழித்து படம் பண்ணலாம் என இயக்குனர் சிவாவிடம் நாசுக்காக சூர்யா கூறி நழுவி விட்டாராம்.

தீபாவளியன்று சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த அண்ணாத்த திரைபடம் ரசிகர்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறவில்லை. ஆனால், சூர்யா, சமீப காலமாக ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், சூரரை போற்று என பல வெற்றி படங்களை கொடுத்து நல்ல பெயரை பெற்று வருகிறார்.

ஆகையால், அந்த பெயரை அவர் கெடுக்க விரும்பவில்லையாம். அதனால் சிவாவிடம் நேரடியாக வேண்டாம் என கூறாமல் மறைமுகமாக கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டாராம்.