ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு ரூ.10 லட்சம் : சூர்யா அறிவிப்பு..!

சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. பாமகவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பலரும் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

Advertisement
tamil cinema news

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் போலீஸ் உயிரிழந்தவரின் மனைவி பார்வதிக்கு ஏதோ ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டிய ஆதரவு தர வேண்டும் என சூரியாவிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் சூர்யா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் 10 லட்சம் ரூபாய் தொகையை டெபாசிட் செய்து அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அந்த தொகை போய் சேரும்படி செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Image