ஷங்கர் படத்தில் இணைகிறார் ‘ஐ’ பட நடிகர்

இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரண் நடித்து வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார். தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது.

ஷங்கர் இயக்கி வரும் இப்படத்தில் கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி, நவீன் சந்திரா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சுரேஷ் கோபி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

tamil cinema news

2015ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “ஐ” படத்தில் வில்லனாக நடித்தார். இந்தப் படத்துக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.