சூர்யா படத்திற்கு பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்

சூர்யா பாண்டிராஜ் கூட்டணியில் பசங்க 2 படம் வெளிவந்தது. அதன் பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்கு வர தயாராக உள்ளது.

இந்த படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, சத்யராஜ், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். ஏற்கனவே அவர் கோலமாவு கோகிலா, டாக்டர் என சில படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.

cinema news in tamil

இந்நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்மவீட்டுப்பிள்ளை போன்ற படங்களை இயக்கியது பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.