தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் சிவகார்த்திகேயன்?

முண்டாசுப்பட்டி, ராட்சசன் படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் தனுஷை வைத்து படம் எடுப்பதாக இருந்த நிலையில் தனுசுக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்கப்போவதாக செய்திகள் பரவுகின்றன.

‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் ‘ராட்சசன்’ படத்தையும் இயக்கினார் அந்த படம் பெரிய வரவேற்பு பெற்றது.

ராம்குமார் கால்ஷீட் கேட்டால் முன்னணி நடிகர்களே தர தயாராக இருக்கிறார்கள். அவர் தனுஷிடம் ஒரு கதையை கூறி இருந்தார். அந்தக் கதை தனுசுக்கு பிடிக்காததால் அதை கதையே சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது.

Advertisement
latest cinema news

சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ படத்தை முடித்துள்ளார். அதன் பிறகு ராம்குமார் இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. ராம்குமாரின் அடுத்த பட ஹீரோ தனுஷா அல்லது சிவகார்த்திகேயனனா என்பது விரைவில் தெரிந்துவிடும்.