டாக்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் ‘டாக்டர்’ கூட்டணி?

நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘டாக்டர்’ படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் வினய், யோகி பாபு, பிரியங்கா மோகன், கிங்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

sivakarthikeyan next movie update

‘டாக்டர்’ படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தற்போது நெல்சன் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். அதன் பிறகு இந்தப் படம் உருவாகும் எனத் தெரிகிறது.