‘டான்’ திரைப்படத்தின் வியக்கவைக்கும் 10 விஷயங்கள், தெரியுமா?!

1. போலீஸ், டாக்டர் போன்ற பல கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஆனால், காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கும் படம் ‘டான்’ தான் முதல் படம். இதற்கு முன்னர் அஜித்தின் ஏகன் படத்தில்தான் காலேஜ் ஸ்டூடண்ட் ஆக முதன் முதலாக அறிமுகமாகினார். ஆனால், படத்தில் அக்காட்சி வெளியாகவில்லை.

2. டான் படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தின் பெயர் சக்கரவர்த்தி. இப்படத்தின் இயக்குநர் பெயரும் சிபிச் சக்கரவர்த்தி!

Advertisement

3. சிவகார்த்திகேயனும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் ஒன்றாக நடிக்கும் முதல் படம் இதுதான். கௌதம் வாசுதேவ் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார்.

4. பாடலாசிரியராக கலக்கி வரும் சிவகார்த்திகேயன் டான் படத்திலும் ஒரு டூயட் பாடலை எழுதியிருக்கிறார்.

5. சிவகார்த்திகேயன் தன்னுடைய டாக்டர் படத்தின் ரூ.100 கோடி வசூல் பெற்றார். இதன் மூலம் 100CR வருமானம் ஈட்டிய தயாரிப்பாளர் பட்டியலில் இணைந்திருக்கிறார். அதன் பிறகு Lyca Productions சேர்ந்து Sivakarthikeyan Productions தயாரிக்கும் முதல் படம் ‘டான்’ தான்.

6. படத்தின் இயக்குநர் சிபிச் சக்கரவர்த்தி தனது முதல் படமான டானிலேயே எஸ்.ஜே சூர்யா, கௌதம் வாசுதேவ், சிங்கம்புலி, மனோ பாலா, சமுத்திரக்கனி போன்ற 5 இயக்குநர்களை இயக்கியிருக்கிறார்.

7. டான் படத்தின் இயக்குநர் சிபிச் சக்கரவர்த்தி, இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். குறிப்பாக விஜய் நடித்த தெறி, மெர்சல் என இரண்டு படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.

8. கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்தாலும் ‘டான்’ படம் காலேஜ் ஸ்டோரி இல்லையாம். இது ஒரு குடும்ப படம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்

9. ‘டான்’ படத்தின் பைலட் காட்சியை விஜய்க்கு காண்பித்திருக்கிறார், அப்போது விஜய் படத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

10. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலக்கிய ஷிவாங்கி டான் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மேலும், மிர்ச்சி விஜய், பால சரவணன், காளி வெங்கட் என ஒரு பட்டாளமே இப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.