பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு : மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.

மயிலாடுதுறை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் மாணிக்க விநாயகம். இவர் பக்திப் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

2001ஆம் ஆண்டு வெளியான ‘தில்’ படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். மேலும் இவர் பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார்.

Advertisement

திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பருத்தி வீரன், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

திருவான்மியூரில் வைக்கப்பட்டிருக்கும் மாணிக்க விநாயகம் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மாணிக்க விநாயகம் மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.