கமல் உடல் நலம் குறித்து ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவல்

நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் சென்னைக்கு திரும்பிய போது லேசான இருமல் இருந்துள்ளது. இதனையடுத்து பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கமல் பூரண குணம் அடைய வேண்டி அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அவருடைய மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எனது தந்தையின் ஆரோக்கியத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்வார்” என அவர் தெரிவித்துள்ளார்.