அக்டோபர் 21-ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஷங்கர்

ஷங்கர் இயக்கும் பான்இந்தியா படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இடப்பதில் ராம்சரண் நடிக்கிறார். மேலும் கியாரா அத்வானி, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சுனில், அஞ்சலி, மலையாள நடிகர் ஜெயராம் உள்பட பலர் நடிக்கின்றனர்.

latest cinema news

தில்ராஜூ இப்படத்தை தயாரித்து வருகிறார். கடந்த மாதம் ஐதராபாத்தில் இந்த படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜையில் சிரஞ்சீவி, ராஜமவுலி, ரன்வீர்சிங் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

இப்படத்திற்கு தற்காலிகமாக விஸ்வம்பரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக புனேயில் பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அக்டோபர் 21-ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஷங்கர். இதில் ராம் சரண்-கியாரா அத்வானி நடிக்கும் காட்சிகள் அதிகமாக படமாக்கப்பட உள்ளது.