மோகன்ஜி யின் அடுத்த படத்தில் இணையும் செல்வராகவன்.

இயக்குனர் செல்வராகவன் தற்போது ‘சாணி காகிதம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தில் முக்கிய வில்லனாக செல்வராகவன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் செல்வராகவன் படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன்ஜி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை செல்வராகவன் மற்றும் மோகன்ஜி இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.