ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘செல்ஃபி’ படத்தின் ட்ரைலர் வெளியீடு

இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதி மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், வர்ஷா பொல்லம்மா மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் செல்ஃபி. டிஜி பிலிம் கம்பெனி மற்றும் வி கிரியேஷன்ஸ் பேனரில் டி சபரீஷ் மற்றும் கலைப்புலி எஸ் தாணு ஆகியோர் தயாரித்துள்ளனர்.

செல்ஃபி திரைப்படத்தில் தங்கதுரை மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement