மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சஞ்சனா.

ஆர்யா நடிப்பில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ படம் வெற்றிப் படமாக அமைந்தது. அந்த படத்தில் நடித்த பல நட்சத்திரங்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைத்தன. இதில் கலையரசனின் மனைவியாக நடித்த நடிகை சஞ்சனா நடராஜன் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

cinema news tamil

தமிழில் வெளிவந்த இறுதிச்சுற்று, நோட்டா, ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்திருந்தாலும் சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகுதான் இவர் பிரபலமாகியுள்ளார். இதன்மூலம் மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வந்துள்ளது. வினோத்குமார் இயக்கும் இந்த படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.