சபாபதி திரை விமர்சனம்

டிக்கிலோனா படத்திற்கு பிறகு சந்தானம் நடிப்பில் வெளியாகும் படம் சபாபதி. இப்படத்தில் சந்தானத்துடன் ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர், ‘குக் வித் கோமாளி’ புகழ், ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சந்தானம் பிறவியிலிருந்தே சரியாக பேச்சு வராமல் திக்கி திக்கி பேசி வருபவர். இதனால் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்திக்கிறார். அவருக்கு ஆதரவாக சிறுவயதிலிருந்தே ப்ரீத்தி வர்மா துணை நிற்கிறார்.

Advertisement

சந்தானத்தின் தந்தை அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற தன்னுடைய பிள்ளையை வேலைக்கு அனுப்ப வேண்டும் என பல நேர்காணலுக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் அங்கு செல்லும் சந்தானத்திற்கு வெறும் அவமானங்கள் மட்டுமே மிஞ்சுகிறது.

இதனால் மனம் நொந்து போன சந்தானம் ஒரு கட்டத்தில் மது அருந்திவிட்டு வீட்டில் ரகளை செய்கிறார். அப்போது சந்தானம் விதியின் கையில் சிக்கிக் கொள்கிறார். அந்த விதியின் விளையாட்டில் இருந்து சந்தானம் எப்படி தப்பித்தார்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

sabapathy movie vimarsanam

சந்தானம் வழக்கம்போல தன்னுடைய கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு நிகரான கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர் கலக்கியுள்ளார். கதாநாயகியாக வரும் ப்ரீத்தி வர்மா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

குக் வித் கோமாளி புகழ் ஒரு சில காட்சிகள் மட்டுமே வருகிறார். புகழின் காமெடியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். சாம் சி.எஸ் பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். ஆனால் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை.

நல்ல கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.