இரண்டு பிரமாண்ட படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..!

இந்த ஆண்டு வெளிவர வேண்டிய இரண்டு பிரம்மாண்ட படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒன்று ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் மற்றொன்று பிரபாஸ் பூஜா ஹெக்டே நடிக்கும் ராதேஷ்யாம்.

பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு படங்களும் ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா மூன்றாவது அலை கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருவதால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரத் தயங்குவார்கள். படங்களின் வசூல் பாதிக்கும் வாய்ப்புள்ளது இதன் காரணமாக இந்த இரண்டு படங்களையும் தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Advertisement