மாதவன் இயக்கி நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இறுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடிகர் மாதவன், ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி உலகளாவிய திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இப்படம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளி பொறியியலாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம். படத்தின் டிரெய்லர் முன்னதாக ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

Advertisement

இது குறித்து நடிகர் மாதவன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் இந்த திரைப்படத்தை மிகுந்த அன்புடனும் அர்ப்பணிப்புடனும் உருவாக்கியுள்ளோம். இதுவரை எங்களுக்கு நீங்கள் அளித்த அனைத்து ஆதரவிற்கும் நன்றி. ” என அவர் தெரிவித்துள்ளார்.