அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

வரும் தீபாவளியன்று சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் வெளியாகவுள்ளது. அதே நேரத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படமும் ரிலீஸ் ஆகிறது.

Advertisement

அதேபோல் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படமும், அஜித் நடிக்கும் வலிமை படமும் ஒரே நேரத்தில் வெளியானால் வசூல் ரீதியாக பாதிப்பு வரலாம் என்பதால் வலிமை படத்தின் ரிலீசை டிசம்பர் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.