யோகிபாபு நடிக்கும் புதிய படத்தில் இணைந்தார் “டோனி” ரெட்டிங் கிங்க்ஸ்லி!

காமெடி நடிகர் ரெட்டிங் கிங்க்ஸ்லி கோலமாவு கோகிலா, LKG, கூர்கா போன்ற படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் புகழ் பெற்று வருகிறார்.

latest cinema news

இந்நிலையில் “காசே தான் கடவுளடா” படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் மிர்சி சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த், கருணாகரன், ஊர்வசி,ஷிவாங்கி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Advertisement

1972ம் ஆண்டு தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஆச்சி மனோரமா நடிப்பில் வெளிவந்த “காசே தான் கடவுளடா” படத்தை இயக்குனர் ஆர். கண்ணன் ரீமேக் செய்ய உள்ளார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

tamil cinema news

இயக்குனர் ஆர். கண்ணன் ஏற்கனவே இயக்கிய கண்டேன் காதலை, சேட்டை, தள்ளிப்போகாதே, எரியும் கண்ணாடி போன்ற படங்களும் ரீமேக் படங்கள் தான்.