ரஜினி விருது குறித்து ராம் கோபால் வர்மா சர்ச்சை ட்விட்

அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு சிக்கலில் மாட்டுபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. தற்போது துணை குடியரசுத் தலைவர் குறித்தும் தாதா சாகேப் பால்கே விருது குறித்தும் கிண்டலாக பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

67வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், விஜய்சேதுபதி, பார்த்திபன், இமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில் அசுரன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ் விருதுகளை வாங்கினர்.

Advertisement

சினிமாவில் 45 ஆண்டுகள் சிறப்பான பணியை ஆற்றிய ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா அந்த புகைப்படத்தை பதிவிட்டு போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அதில் “தாதா சாகேப் பால்கேவுக்கு கொரியர் மேன் மூலமாக ரஜினி விருது கொடுத்தார்” என பதிவிட்டுள்ளார். இதனை கண்டித்து ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.