தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகும் ரஜினியின் அண்ணாத்த படம்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

annatha first look poster

படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. டி இமான் இசையில் பாடல்கள் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படம் தீபாவளியன்று ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்தது. படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அமெரிக்காவில் மட்டும் ஒரு நாள் முன்னதாகவே நவம்பர் 3 ஆம் தேதியே ரிலீஸ் ஆக உள்ளது.