அடுத்த படத்தில் நடிக்க தயாராகிறார் ரஜினிகாந்த்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ‘அண்ணாத்த’ படம் தீபாவளி அன்று வெளிவந்தது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் 200 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

latest cinema news

இந்நிலையில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க தயாராக உள்ளதாகவும் அடுத்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் தகவல்கள் பரவிவருகிறது.

Advertisement

சமீபத்தில் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ரஜினியின் புதிய படத்தை இயக்க போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பார் என பேசப்பட்டது. அதன் பிறகு பேட்டை படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிப்பார் என இன்னொரு தகவலும் பரவி வருகிறது.

ரஜினியின் புதிய படம் பற்றி அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.