ரஜினிக்கு இரவு முழுவதும் தீவிர சிகிச்சை? பரபரப்பு தகவல்

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்திற்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சிறுநீரக பிரச்சனைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரஜினிக்கு உடல் நலனில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். பிறகு தமிழகம் திரும்பிய ரஜினிகாந்த் அண்ணாத்தே திரைப்படப் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

Advertisement

சமீபத்தில் டெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் ரஜினிகாந்த், தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். ரஜினிகாந்த் இந்த விருது பெற்றவர்களுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

latest tamil cinema news

தீபாவெளியன்று வெளியாகும் அண்ணாத்த திரைப்படத்தை ரஜினி தனது பேரனுடன் பார்த்தார். இந்நிலையில் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம் என லதா ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்.