மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ரஜினி.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு நீக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய ரஜினிகாந்தை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தார்.

Advertisement