எங்கள் சாமியே மீண்டுவா..தீச்சட்டி ஏந்தி, மண்சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

ரஜினி நலமுடன் இருப்பதாகவும் விரைவில் வீட்டிற்கு திரும்பி விடுவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Advertisement

இந்நிலையில் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டும் தீச்சட்டி ஏந்தியும் வழிபாடு நடத்துகிறார்கள். மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ரஜினிகாந்த் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி அவரது ரசிகர்கள் 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

வெயில் உகந்த அம்மன் திருக்கோயிலில் மண்சோறு சாப்பிட்டு வேண்டிக்கொண்டனர். புதுச்சேரியில் ‘எங்கள் சாமியே மீண்டுவா’ என பேனர் வைத்து அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி ரசிகர்கள் சிறப்பு பூஜைகளை செய்து உள்ளனர்.