அண்ணாத்த போஸ்டருக்கு ரத்த அபிஷேகம் – சர்ச்சையில் சிக்கிய ரஜினி ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. இந்த படம் வரும் தீபாவளியன்று வெளியாகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாலை 6 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

ஒரே நாளில் மூன்று முறை அண்ணாத்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டதால், ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்கள்.

Advertisement

வழக்கமாக ரசிகர்கள் பெரிய பெரிய கட்-அவுட் வைத்து பால் அபிசேகம் செய்வது வழக்கம். ஆனால் ரஜினி ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று அண்ணாத்த போஸ்டருக்கு ரத்தத்தால் அபிசேகம் செய்துள்ளனர்.

ஒரு ஆட்டின் தலையை வெட்டி அதிலிருந்து வரும் ரத்தத்தை வைத்து அபிஷேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.