சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜவம்சம்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமான சசிகுமார் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘எம்.ஜி.ஆர் மகன்’, ‘நா நா’, ‘பகைவனுக்கு அருள்வாய்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் ‘ராஜவம்சம்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் சசிகுமார், நிக்கி கல்ரானி, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ் , மனோபாலா, சிங்கம் புலி, யோகி பாபு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர்.

latest cinema news

சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில் ‘ராஜவம்சம்’ நவம்பர் 26ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.