திடீரென உடல் எடையை குறைத்த நடிகர் பிரபு – காரணம் இதுதான்

இயக்குனர் வினோத் குமார் இயக்கும் புதிய படத்தில் விஷால் நடித்து வருகிறார். விஷால் 32 என குறிப்பிடப்படும் இந்த படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். மேலும் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் நடிகர் பிரபு ஒரு முக்கியமான பாத்திரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபுவும் விஷாலும் இணைந்து 2007 ல் ஹரி இயக்கத்தில் வெளிவந்த ‘தாமிரபரணி’ படத்திலும் 2015 ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஆம்பள படத்திலும் நடித்துள்ளனர். தற்போது விஷால் நடித்து வரும் புதிய படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

Advertisement

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முக்கிய கதாபத்திரத்தில் நடிப்பதற்காக பிரபு உடல் எடையை குறைத்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த படத்திற்கு விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சிஎஸ் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மாதமாக சென்னை விமான நிலையம் அருகே ஒரு அதிரடி காட்சி எடுக்கப்பட்டு வருகிறது. இது விஷால் படம் என்பதால், அதிரடிக்கு எந்தப் பஞ்சமும் இருக்காது.