கவர்ச்சி புயலாக மாறிய விஜய் பட நடிகை

2012 ஆம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பிறகு தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார்.

தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யுடன் சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ள நடிகை பூஜா ஹெக்டே வித விதமாக கவர்ச்சி போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

Advertisement

அந்த போட்டோக்கள் எல்லாம் வைரலாக பரவி வருகின்றன. பீஸ்ட் படத்தில் நடிப்பதை விட்டுட்டு இப்படி போட்டோ எடுத்துக்கிட்டு இருக்கியே என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.